Why we are?
இணையவழி விளையாட்டு ஆணையத்தின் பணிகள்
Subsequent to the enactment of the Tamil Nadu Prohibition of Online Gambling and Regulation of Online Games Act, 2022, the Tamil Nadu Government have set up an Online Gaming Authority. As per the Official Gazette, “The Tamil Nadu Online Gaming Authority” has been formed under section 3 of the Tamil Nadu Online Gambling and Regulation of Online Games Act, 2022.
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2022இல் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஓர் இணையவழி விளையாட்டு ஆணையத்தை அமைத்துள்ளது. அதிகாரப்பூர்வ அரசிதழின்படி, தமிழ்நாடு இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2022, பிரிவு 3-இன் கீழ் “தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம்” உருவாக்கப்பட்டுள்ளது.
The functions of the Authority are regulatory in nature. The Authority is mandated to issue certificate of registration to local online games providers. The Authority is also to identify online games of chance and recommend to the Government, for inclusion in the Schedule for banning. Apart from issuing certificate of registration, the Authority have to oversee the functioning of the online games providers in the State. Further the Authority is also mandated to collect and maintain information and data with regard to the activities of the online games providers, resolve grievances or complaints received against any online games providers and advise the Government on any matter regarding online gaming.
இவ்வாணையத்தின் செயல்பாடுகள் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூர் இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்குப் பதிவுச் சான்றிதழை வழங்கி இந்த ஆணையம் செயல்படுகிறது. இணையவழியில் விளையாடும் வாய்ப்பு சார்ந்த விளையாட்டுகளை அடையாளம் கண்டு, தடை செய்வதற்கான அட்டவணையில் சேர்க்குமாறு அரசாங்கத்திற்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.
பதிவுச் சான்றிதழை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் இணையவழி விளையாட்டு வழங்குநர்களின் செயல்பாட்டை இவ்வாணையம் மேற்பார்வையிடவும் வேண்டும். மேலும், இணையவழி விளையாட்டு வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரித்துப் பராமரிக்கவும், எந்தவொரு இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கும் எதிராகப் பெறப்பட்ட குறைகள் அல்லது புகார்களைத் தீர்க்கவும், இணையவழி விளையாட்டுகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவும் ஆணையம் பணிக்கப்பட்டுள்ளது.