The Tamil Nadu Online Gaming Authority shall perform the following functions, namely:-
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்:
- Regulate online games
- இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல்,
- Issue certificate of registration to local online games providers
- உள்ளூர் இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்குப் பதிவுச் சான்றிதழை வழங்குதல்,
- Identify online games of chance and recommend to the Government for inclusion in the Schedule
- வாய்ப்பு சார்ந்த இணையவழி விளையாட்டுகளை அடையாளம் கண்டு, அட்டவணையில் சேர்க்க அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தல்,
- Oversee the functioning of the online games providers in the State
- மாநிலத்தில் இணையவழி விளையாட்டு வழங்குபவர்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல்,
- Collect and maintain information and data with regard to the activities of the online games providers
- இணையவழி விளையாட்டு வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரித்து பராமரித்தல்,
- Request the Government to take appropriate action as per the Information Technology Act, 2000, whenever deemed necessary, for the purposes of this Act,
- இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000-இன்படி, அவசியமாகக் கருதப்படும் நேர்வுகளில், பொருத்தமான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக் கோருதல்,
- Resolve grievances or complaints received against any online games provider
- எந்தவொரு இணையவழி விளையாட்டு வழங்குநருக்கும் எதிராகப் பெறப்பட்ட குறைகள் அல்லது புகார்களைத் தீர்த்தல்,
- Send periodical reports to the Government in such manner as may be prescribed
- பரிந்துரைக்கப்பட்ட முறையில் அரசாங்கத்திற்கு அவ்வப்போது அறிக்கைகளை அனுப்புதல்,
- Advise the Government on any matter regarding online gaming
- இணையவழி விளையாட்டு தொடர்பான எந்தவொரு விவரங்கள் குறித்தும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்,
- Perform such other functions as may be prescribed: and
- அவ்வப்போது அரசால் பரிந்துரைக்கப்படும் மற்ற பணிகளை மேற்கொள்ளுதல்.
- The Authority, or any officer empowered by it may take such steps as may be necessary to obtain any information from any online games provider or online game player.
- எந்தவொரு இணையவழி விளையாட்டு வழங்குநர் அல்லது இணையவழி விளையாட்டை விளையாடுபவரிடமிருந்தும் எந்தவொரு தகவலையும் பெறுவதற்கு இவ்வாணையம் அல்லது இதன் மூலம் அதிகாரம் பெற்ற எந்தவொரு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்,
- The Authority shall, while discharging any of its functions under this Act, have the same powers as are vested in a Civil Court while trying a suit under the Code of Civil Procedure, 1908, in respect of the following matters, namely:
- Central Act V of 1908 -
- Summoning and enforcing the attendance of any person
- Receiving oral evidence on oath or written evidence on affidavits
- Requiring the discovery and production of any document
- Requisitioning of any public record or copy thereof from any court or office
- Issuing summons for examination of witnesses or documents and if any other matter, which may be prescribed
- இந்த சட்டத்தின் கீழ் அதன் செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் போது, 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை விசாரிக்கும் போது, ஒரு சிவில் நீதிமன்றத்தில் உள்ள அதே அதிகாரங்களை அதிகார அமைப்பு கொண்டிருக்கும், அதாவது: -
1908 ஆம் ஆண்டின் மத்திய சட்டம் V :-
- எந்தவொரு நபரையும் வரவழைத்து வருகையைக் கட்டாயப்படுத்துதல்.
- சத்தியப்பிரமாணத்தின் பேரில் வாய்மொழி சாட்சியங்களைப் பெறுதல் அல்லது பிரமாணப் பத்திரங்களில் எழுத்துப்பூர்வ சாட்சியங்களைப் பெறுதல்.
- எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க ஆணையிடுதல்.
- எந்தவொரு நீதிமன்றம் அல்லது அலுவலகத்திலிருந்தும் எந்தவொரு பொதுப் பதிவையும் அல்லது அதன் நகலையும் கோருதல்
- சாட்சிகள் அல்லது ஆவணங்களை விசாரிப்பதற்குச் சம்மன் அனுப்புதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வேறு ஏதேனும் விஷயங்கள் இருந்தால் அழைப்பாணை அனுப்புதல்.
- இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள், குறித்து குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
Awareness Initiative: The Authority would strive to create awareness about the ill effects of online gaming, especially among children, adolescents, and youth.